முக்கிய செய்திகள்
Highlighter

இழப்பீடு என்றால் என்ன?

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தலையீடுகளின் பின்னணியில் இழப்பீடுகள் என்பது மோதலின் போது பாதிப்புக்கு உற்பட்டதன் விளைவாக எற்படுகின்ற நிலைமையை சமாளிப்பதற்காக இன்னலுக்குள்ளானவா;களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மீறல்களில் சில சரிசெய்ய முடியாதவை மற்றும் இழப்பீடுகளால் வழங்கப்பட்ட எவற்றினாலும் இன்னலுக்குள்ளானவரின் முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியாது என்பதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

இழப்பீடு என்பது இடைக்கால நீதியின் பரந்த சூழலில் அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். இடைக்கால நீதி என்பது ஐக்கிய நாடுகள் சபையால் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது –

“கடந்த காலத்தில் நிகழ்ந்த பாரிய அளவிலான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கும், நீதியினை நிலைநாட்டுவதற்கும், நல்லிணக்கத்தினை அடைவதற்குமான சமூகத்தின் முயற்சியுடன் தொடர்படைய முழு அனவிலாள செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள்”

இடைக்கால நீதி முறையின் கீழ் நான்கு அடிப்படைக் கோட்பாடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:

(அ) மனித உரிமை மீறல்கள் மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்கள்  மற்றும் குற்றம் புரிந்தவர்களாக் கண்டறியப்பட்டவர்களைத் தண்டிப்பதற்கும் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை விசாரிப்பதும், வழக்குத் தொடர்வதும் அரசின் கடப்பாடாகும்.

(ஆ) கடந்த கால துஷ்பிரயோகங்கள் மற்றும் காணாமல் போனவர்களின் தற்போதைய நிலை. உண்மையை அறியும் உரிமை

(இ) மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்களால் இன்னலுக்குள்ளானவர்கள் இழப்பீடு பெறுவதற்கான உரிமை;

(ஈ) எதிர்காலத்தில் இதுபோன்ற கொடூரங்கள் மீண்டும் நிகழாமல் பல்வேறு நடவடிக்கைகளினூடாக அனைத் தடுப்பது தொடர்பான அரசின் கடப்பாடு.

"சர்வதேச மனித உரிமைச் சட்டம் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கடுமையான மீறல்களால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு பெறும் உரிமை பற்றிய அடிப்படை கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள்." தொடர்பில் 2005 டிசம்பர் 16ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 60/147 இலக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.

2018ஆம் ஆண்டின் சட்டத்தின் மூலம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இழப்பீட்டு முறை, கடந்த கால திட்டங்களை மேம்படுத்தி அதன் தலையீடுகளின் நோக்கத்தினை வலுப்படுத்துகின்றது. அத்தோடு தேசிய ஒற்றுமை. நல்லிணக்கம், மீள நிகழாமை என்பவற்றினை உறுதி செய்வதே இழப்பீடுகளை வழங்குவதன் இறுதி நோக்கம் என்பதனை வலுவாக அங்கீகரிக்கிறது.