முக்கிய செய்திகள்
Highlighter

இலங்கையில் மோதல்கள் காரணமாக ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்வது தொடர்பிலான வரலாற்று ரீதியான கண்ணோட்டம்.

மோதல் நிலைமைகளின் காரணமாக ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடுகள் அல்லது நட்டஈடுகளை வழங்குகின்ற எண்ணக்கருவானது இலங்கையைப் பொறுத்த வரை அண்மைக்காலத்தில் தோன்றியதொரு நிகழ்வு அல்ல.

1983ஆம் ஆண்டு ஜுலையில் நிகழ்ந்த சம்பவங்களுக்குப் பின்னர், அத்தகைய நிகழ்வுகளினால் பாதிக்கப்பட்ட வணிகங்களை புதுப்பிப்பதற்காக அரசானது ஒரு பொறிமுறையினை அறிமுகப்படுத்திய போதே முதல் சட்டரீதியான தலையீடானது அங்கீகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட சொத்துக்கள், கைத்தொழில்கள் என்பவற்றினைப் புனரமைப்பதற்கான அதிகார சபையானது (REPIA) 1983ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க அவசரகால விதிகளின்படி பொதுப் பாதுகாப்பு ஆணையின் 5ஆவது விதிக்கமைய நிறுவப்பட்டது. இதன் மூலம் வணிகங்களுக்கு உதவி மற்றும் நட்டஈட்டினை வழங்குவதற்கும், சேதமடைந்த சொத்துக்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதற்கும், வாழ்வாதார உதவிகளை நாடிநிற்போருக்கு கடன் திட்டங்களை வழங்குவதற்கும் பணிக்கப்பட்டது.

சொத்துக்கள் சேதத்திற்கான இழப்பீடு, மற்றும் வாழ்வாதார உதவி தேவைப்படுபவர்களுக்கு கடன் திட்டங்களை வழங்குதல். காயமடைந்த அல்லது கொல்லப்பட்ட நபர்களுக்கான நட்டஈடுகள் அமைச்சரவையின் ஒப்புதலுடன் அல்லது பிரதேச செயலகங்களின் கோரிக்கையின் பேரில் வழங்கப்பட்டன. ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்களை மறுசீரமைக்கும் அதிகார சபையானது (REPPIA) என்பது அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு தற்காலிக பொறிமுறையாகும். சில ஆண்டுகளுக்குப் பின்னர் 1987ஆம் ஆண்டின், 19ஆம் இலக்க ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்களை புனரமைக்கும் அதிகார சபைக்கான பாராளுமன்றச் சட்டத்தின் அடிப்படையில் நிரந்தர அரச நிறுவனமாகத் தொடரப்பட்டது.

கலவரங்கள் அல்லது உள்நாட்டு கலவரங்களால் பௌதீக ரீதியாகப் இன்னலுக்குள்ளான நபர்களின் மறுவாழ்வுக்கு உதவுவதற்கும், அத்தகைய சம்பவங்களால் பாதிக்கப்பட்ட சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு நட்டஈடுகளை வழங்குவதற்கும், அத்தகைய சொத்துக்களை புனரமைப்பதற்கும், மீட்டெடுப்பதற்கும் ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்களை புனரமைப்புச் செய்யும் அதிகார சபைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. குறிப்பிட்ட நட்டஈட்டு மற்றும் கடன் திட்டங்களுக்கான ஒப்புதலினை ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்கள் புனரமைப்பு அதிகார சபை கோரியதுடன் அதனைப்பெற்றுக் கொண்டது.

இனப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளைக் கையாள்வதற்காக அரசானது தொடர்ச்சியாக விசேட நிவாரணத் திட்டங்களை செயற்படுத்தி வந்துள்ளது. நட்டஈடுகள் மற்றும் நிதிசார் மற்றும் ஏனைய நிவாரணங்கள் என்பன வழங்கப்பட வேண்டியது தொடர்பான விதிமுறைகள், நிபந்தனைகள் என்பவற்றினை வகுத்து பல சுற்றறிக்கைகளினூடாக 1987 முதல் வெளியிடப்பட்டன. வடக்கு மற்றும் கிழக்கில் இன மோதலின் போது நடந்த சம்பவங்களுக்கு அப்பால், சமூக ஒற்றுமையின்மை காரணமாக தூண்டப்பட்ட ஏனைய பல சம்பவங்களும், ஆங்காங்கே இடம்பெற்றிருந்தன. பேருவளை (2006, 2014)இ அளுத்கம (2014), கிந்தோட்டை (2017), அம்பாறை (2018), திகன, தெல்தெனிய (2018) போன்ற பிரதேசங்களிலும் மிக அண்மையில் உயிர்த்த ஞாயிறு வெடிகுண்டு தாக்குதலும் (ஏப்ரல் 2019) அதன் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகள் (மே 2019) என்பவற்றின் போதிலும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக குறிப்பிட்ட நிவாரண உதவிகள் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டன.

மோதல் காலங்களில் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்ட நாடுகளுக்கான நிலைமாறுகால நீதி தொடர்பில் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறையானது உலகலாவிய ரீதியில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுக்கும் விடையளிக்கும் வகையில் புதிய அர்தத்தினைக் கொண்டு விளங்குகின்றது. சாராம்சத்தில் இந்நாடுகளின் சாதாரண நீதி முறையானது அங்கு நடந்தேறிய மனித உரிமை மீறல்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிக்க முடியாத வழிமுறைகளை உள்ளடக்கியுள்ளதாக அங்கீகரிக்கப்படுகிறது.

இடைக்கால நீதி முறையில் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளுக்கு ஏற்ப, இழப்பீடுகளை வழங்குவதற்கான கொள்கை 2018ஆம் ஆண்டில் ஒரு புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட இழப்பீடு வழங்கும் கொள்கையை விரிவுபடுத்திய இழப்பீட்டு கொள்கையானது ஒக்டோபர் 2015 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபையின் தீர்மானம் 30/1 இல் முன்பு உறுதி செய்யப்பட்டது என்பதோடு அத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்கால நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக முன்மொழியப்பட்ட பொறிமுறைகள் குறித்து பொது மக்களின் நோக்கு மற்றும் கருத்து என்பவற்றை பெறுவதற்காக, ஜனவரி 2016 இல் நியமிக்கப்பட்ட "நல்லிணக்கப் பொறிமுறைகள் குறித்த ஆலோசனைப் பணிக்குழு" அறிக்கையினை சமர்ப்பித்தது.

2018 ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டம் ("இழப்பீட்டு அலுவலகச் சட்டம்") இயற்றப்பட்டு, 2018 ஒக்டோபர் 22ஆம் திகதி அமுலுக்கு வந்தது. வன்முறையால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு நட்டஈடு அல்லது இழப்பீடுகளை வழங்குவதற்கான முறைமையைக் கையாளுவதற்காக அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட இரண்டாவது சட்டம் இதுவாகும். இழப்பீட்டுகளுக்கான அலுவலகச் சட்டம் வெறுமனே நிதிசார்ந்த நிவாரண நடவடிக்கைகளை வழங்குவதற்கு அப்பாற்பட்டதாகும். இது நிவாரணம் மற்றும் பாரியளவிலான எதிர்பார்ப்புக்களை வழங்குவதற்கான அடிப்படையை வெளிப்படுத்துகிறது. அதன் முன்னுரையில்,இலங்கையின் அரசியலமைப்பு அனைத்து இலங்கையர்களின் உள்ளார்ந்த கௌரவத்தையும் சமத்துவத்தையும் மீற முடியாத மனித உரிமைகளையும் அங்கீகரிக்கிறது என்பதைக் குறிப்பிடுகின்றது. மற்றும் இந்த உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் என்பன குறித்து அரசிற்குரிய கடப்பாட்டினை அங்கீகரித்துள்ளது. மேலும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமைகளின் ஒரு பயனுள்ள தீர்வாகத் தொகுக்கப்படுள்ள விரிவானதொரு இழப்பீட்டுத் திட்டமானது நல்வாழ்வுக்கான நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கும், எதிர்கால தலைமுறையினர் உட்பட அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பிற்கும் பங்களிக்கும் எனவும் அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது. இன்னலுக்குள்ளானவர்களுக்கு இழப்பீட்டு கொடுப்பனவினைச் செலுத்துவதாக மட்டுமல்லாமல் நமது மக்கள் அனைவரினதும் நல்வாழ்வையும்இ பாதுகாப்பையும் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாகவும் நல்லிணக்கத்தின் பரந்த நோக்கத்திற்கு பங்களிக்கும் ஒரு பொறிமுறையாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதனை ஏற்றுக் கொள்கின்றது. எனவே புதிய சட்டமானது ஒரு இலட்சியத்தையுடைய உயர்ந்த நோக்கத்தை வெளிப்படுத்தியது. சட்ட மூலத்தை அறிமுகப்படுத்திய போது அக்காலப் பகுதிக்குரிய பிரதமர் “இந்நாட்டில் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்காக நாங்கள் முன்மொழிந்தவற்றில் ஒன்று இழப்பீடுகளுக்கான அலுவலக சட்ட மூலம்” எனக் கூறிப்பிட்டார்.

இழப்பீட்டு அலுவலகச் சட்டம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்த ஆயுத மோதலின் போது அல்லது அதன் பின்னரான விளைவுகளினால் அல்லது அரசியல் அமைதியின்மை காரணமாக அல்லது உள்நாட்டு இடையூறுகள் அல்லது கட்டாயப்படுத்தப்படுதல், காணாமல் போதல் காரணமாக ஏற்பட்ட இழப்புகளால் (அதாவது தனிப்பட்ட காயம், மரணம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம்) பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கு இடமளிக்கின்றது. இது கடந்த கால மற்றும் எதிர்கால நிகழ்வுகளைச் கையாள்வதற்கானதொரு ஒரு முறையினை நிறுவுகின்றது.

இழப்பீடுகளுக்கான புதிய அலுவலகம்,அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களின் நியமனத்துடன் ஏப்ரல் 2019 இல் இருந்து செயற்படத் தொடங்கியது. இழப்பீடுகளுக்கான அலுவலக சட்டம் 1987ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைதொழில்களை புனரமைப்புச் செய்யும் அதிகார சபையின் சட்டத்தை (REPPIA) இரத்து செய்தது. அத்துடன்; ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைதொழில்களை புனரமைப்புச் செய்யும் அதிகார சபையினாது முடிவிற்கு வந்தது.

ஆட்கள், ஆதனங்கள் மற்றும் கைத்தொழில்களை புனரமைப்புச் செய்யும் அதிகார சபையானது தனிநபர்களுக்கான நிதிசார் நட்டஈடுகளை இழப்பீடு வழங்கிய அதேவேளை, இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டமானது அதற்கும் அப்பாற்பட்ட நிவாரணங்களை வழங்குகிறது. குறிப்பாக உள சமூக ஆதரவு ஊடாகவும், பாடசாலைகள் அல்லது பாதைகள் என்பவற்றை அல்லது சந்தை என்பவற்றினை அணுகுவதற்கான வசதிகள் என்பவற்றை சமூகங்களுக்கு வழங்குவது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்குவதன் ஊடாகவும், பொது மக்களின் கல்வி, மற்றும் குழந்தைகள், இளைஞர்கள், பெண்கள் அத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான விசேட கொள்கைளை வழங்குவதன் ஊடாகவும் ஏனைய பல்வேறு வழிகளில் மக்களுக்கு உதவியளிப்பதில் கரிசனை கொள்கின்றது. இன்னலுக்குள்ளான நபர்களின் தேவையின் அளவை மதிப்பிடுவதன் மூலம் எதிர்கொள்ளப்படும் உண்மையான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்க வேண்டியதன் அவசியத்தினை அது அங்கீகரிக்கிறது. மேலும் இன்னலுக்குள்ளான நபர்களை மீண்டும் கட்டியெழுப்பவும் அவர்களது வாழ்க்கையை மீட்டெடுக்கவும் உதவத்தக்க அர்த்தமுள்ள நிவாரணத்தினை வழங்குவதன் மூலம். இது தனிப்பட்ட மற்றும் கூட்டு இழப்பீடுகளை வழங்குகிறது.

குறிப்பாக இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டமானது பாரபட்சமின்றியதும், பாதிக்கப்பட்டவர்ளை மையப்படுத்தியதும், நேர்மையானதுமான கொள்கைகளினால் வழிநடத்தப்படும் முகமாகப் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் சிறப்புத் தேவைகளைக் கருத்தில் கொண்டு சட்ட ரீதியான கட்டாயத்தினை வழங்குகின்றது. இவ்வாறான அர்த்தமுள்ள நிவாரணங்களை வழங்குவது எமது மக்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் பங்களிக்கும் என ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.