முக்கிய செய்திகள்
Highlighter
 உச்ச நீதிமன்றத்தின் 2023, ஜனவரி 12ம் திகதியிடப்பட்ட SCFR எண்கள் 163/2019, 165/2019, 166/2019, 184/2019, 188/2019, 191/2019, 193/2019, 195/2019, 196/2019, 197/2019, 198/2019 மற்றும் 293/2019 எனும் தீர்ப்பிற்கமைவான உத்தரவுக்கிணங்க இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் பின்வரும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
01. பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதியம் 2023, ஜனவரி, 19 முதல் இலங்கை வங்கி இராஜகிரிய கிளையில் 0090167960 கணக்கு இலக்கத்தில் ‘ஈஸ்டர் தாக்குதல் ஏப்ரல் 2019 பாதிக்கப்பட்டோர் நிதி’ என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்பட்டது.  அதன்படி, உரிய பிரதிவாதிகளுக்கு கணக்கு விபரங்கள் அறிவிக்கப்பட்டது.
 
பிரதிவாதிகளிடமிருந்து மொத்தமாக ரூபா.33,825,588.87 இந் நிதியத்திற்கு 2023, ஜூலை 11ம் திகதி வரைக்கும் பெறப்பட்டது. இத் தொகைகள் 2023, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெறப்பட்டன. தேவைகள் மதிப்பிடப்பட்டு அதன் அடிப்படையில் இந் நிதி வழங்கல்கள் தீர்மானிக்கப்படும்.
 
 
02. பாதிக்கப்பட்ட நிதியத்திற்கு பங்களிப்பு வழங்க அழைப்பு விடுக்கும் அறிவிப்பு, 2023, ஜனவரி 29ம் திகதி பின்வரும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது – சிலுமின, வீரகேசரி, சண்டே ஒப்சோவர், லங்காதீப, தினகரன் மற்றும்  த சண்டே டைம்ஸ் இவ் அறிவிப்பினை இங்கே பார்வையிடலாம். பார்க்க 
 
03. நட்டஈடு செலுத்தாமை மற்றும் குறைவான கொடுப்பனவுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அறிக்கை கௌரவ சட்டமா அதிபருக்கு 2023, மார்ச் 14ம் திகதி கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டது. இங்கே பார்வையிடலாம். பார்க்க
 
04. இவ் நிதியிலிருந்து கொடுப்பனவு செலுத்தும் திட்டம் 2023, ஜனவரி இல் உருவாக்கப்பட்டது. இதனை இங்கே பார்வையிடலாம். பார்க்க

பாதிக்கப்பட்ட நபர்களின் தேவைகளின் மதிப்பீட்டின் அடிப்படையில் அந்நிதியிலிருந்து பணம் பகிர்ந்தளிப்பது தீர்மானிக்கப்படும்.