முக்கிய செய்திகள்
Highlighter
1. ஏப்ரல் 5, 2021 இலிருந்து  ஜனவரி 28, 2022:
முன்னோடி உள சமூக ஆதரவு திட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவ முகாமையாளர்களுக்கான பயிற்சி

         

          i. 1வது வதிவிடப் பயிற்சி  (சிங்கள மொழி மூலம்) : 19.04.2021 -23.04.2021

        ii. 1வது வதிவிடப் பயிற்சி  (தமிழ் மொழி மூலம்) : 05.04.2021 – 09.04.2021
 
        iii. 2வது வதிவிடப் பயிற்சி  (தமிழ் மொழி மூலம்) : 4.06.2021 – 21.06.2021
        iv. 2வது வதிவிடப் பயிற்சி  (சிங்கள மொழி மூலம்) :15.06.2021 – 05.07.2021
 
         v. இறுதி வதிவிடப் பயிற்சி (சிங்கள மொழி மூலம்):02.11.2021 – 05.11.2021
        vi. இறுதி வதிவிடப் பயிற்சி (தமிழ் மொழி மூலம்):( 23.11.2021 – 26.11.2021 மற்றும் 25.01.2022-28.01.2022
 
2. அக்டோபர் 8, 2021 : அபிவிருத்திக்கான பங்காளர்களுக்கான மன்றம் (Development Partners Forum) இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் வகிபங்கு குறித்து அபிவிருத்திக்கான பங்காளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. மன்றத்தில் 40 க்கும் மேற்பட்ட அபிவிருத்திக்கான பங்காளர்கள் கலந்து கொண்டனர் மற்றும் இடப்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனத்தின்  திட்டத்தலைவர் இதனை வழிநடத்தினார்.
 
3. அக்டோபர் 15, 2021: சிவில் சமூக அமைப்புகளுடனான (CSO) உரையாடல். 30 ற்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்பினர் கலந்து கொண்டனர். உரையாடலின் முக்கிய நோக்கமாக, இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சிவில் சமூக அமைப்புகளுக்கு விளக்குதல் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதரவளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் பற்றியதாக கலந்தரையாடல் அமைந்தது. 
 
4. அக்டோபர் 29, 2021 : மாண்புமிகு. வட மாகாண ஆளுனர் மற்றும் மாவட்டச் செயலாளர்களுடனான சந்திப்பு.  இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின்  கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு விளக்கமளித்தல் மற்றும் மாவட்ட மற்றும் பிரதேச அளவில் பாதிக்கப்பட்ட நபர்களின் பிரச்சினைகள், குறைகள் என்பவற்றினை அடையாளம் காணுவது தொடர்பில் அவர்களது ஆதரவைப் பெறுவதுடன் அவற்றுக்கான அர்த்தமுள்ள தலையீடுகள் பற்றியும் கலந்தரையாடுவதே இக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
 
5. நவம்பர் 11, 2021 : 25 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்கள் மாநாட்டில் மாவட்டங்களில் உள்ள சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கு இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து விளக்கமளிக்கவும், இன்னலுக்குள்ளான நபர்களின் பிரச்சினைகள் மற்றும் குறைகளை இனங்காண்பது தொடர்பில் அவர்களது ஆதரவைப் பெறுவதற்காகவும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் உள்ள அர்த்தமுள்ள தலையீடுகள் பற்றிக் கலந்துரையாடுவதற்காகவும் விளக்கப்படமானது (Presentation)  காட்சிப்படுத்தப்பட்டது.
 
6. டிசம்பர் 3 மற்றும் 4 2021 - முதலாவது வாழ்வாதார உதவித் திட்டம் - “அறிவு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டம் (Train 2 Pro)” இலக்குக் குழு -  வலிகாமம் வடக்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட 102 குடும்பத்தைத் தலமைதாங்கும் பெண்களுக்கு இந் நிகழ்ச்சித் திட்டத்தினூடாகப் புதிய தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்ட ஆரம்பங்கள் பற்றிய விழிப்புணர்வு அமர்வுகள் இடம்பெற்றன. – புதிய ஆரம்பங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளக்கூடிய தொழில்நுட்ப விளக்கங்கள் மூலம் பெண்களுக்குப் பாரம்பரிய நோக்கங்களுக்கு அப்பால் செல்வதற்காக ஊக்கமளிக்கும் ஊக்குவிப்பு  அமர்வு என்பன இடம்பெற்றன.
 
7. டிசம்பர் 22, 2021 : முன்னோடி உள சமூக மதிப்பீட்டினை மேற்கொள்வதற்காக இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் பயிற்றுவிக்கப்பட்ட சம்பவ முகாமையாளர்கள் தங்கள் களப் பணியினை ஆரம்பித்தனர். ஐந்து மாவட்டங்களில் (கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாற, குருநாகல், மாத்தறை) தெரிவு செய்யப்பட்ட 136 குடும்பங்களைக் கையாள்வதற்காக  பயிற்சி பெற்ற 26 சம்பவ முகாமையாளர்கள் தற்போது களத்தில் பணிபுரிகின்றார்கள்.
 
8. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி :
  1. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் உத்தியோகத்தர்களுக்கான உளவியல் முதலுதவி தொடர்பான பயிற்சி  - 27.08.2020.
  2.  சமத்துவம் மற்றும் நீதிக்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பால்நிலை மற்றும் இழப்பீடு தொடர்பான அமர்வு (CEJ) -; 24.02.2021.
  3. தேவைநாடும் பெண்கள் இமைப்பினால் (WIN) 2021 இல் இழப்பீடுகளுக்கான அலுவலக உத்தியோகத்தர்களுக்ககு வீட்டு வன்முறை தொடர்பில் விழிப்புணர்வு அமர்வு நடாத்தப்பட்டது.
  4.  உலக உளநல தினத்தைக் குறிக்கும் விதத்திலான உள சமூக ஆதரவு தெடர்பான விழிப்புணர்வு அமர்வு - 10.10.2021. பாதிக்கப்பட்டவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்ளுதல்  மற்றும் நிவாரணம் வழங்குதல் ஆகிய விடயங்களில் இழப்பீடுகளுக்கான  ஊழியர்களின் பங்கு என்பனவே  இவ் அமர்வின் மூலம் பகிரப்பட்ட முக்கிய செய்திகளாகும்.
  5. கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் தொடர்பில் - 10.11.2021.
  6. அழுத்தம் மற்றும் அதனைச் சமாளித்தல் தொடர்பிலான உளவியல் அமர்வு - 10.12.2021.
  7. இன்னலுக்குள்ளான நபர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல் தொடர்பிலான விழிப்புணர்வு அமர்வானது புனர்வாழ்வுக்கான பணியகத்தின் ஆணையாளர் நாயகத்தினால் நடாத்தப்பட்டது -24.01.2022
9. சிவில் சமூக அமைப்புக்களின் பங்குதாரர்களுடனான பின்தொடர்தல் அமர்வு:
  1.  நவம்பர் 25, 2021 - முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி அறக்கட்டளையின் 25 உறுப்பினர்களுடான கலந்துரையாடல் (MWDT- புத்தளம் மாவட்டத்தின் இடம்பெயர்ந்த சமூகத்தினர்).
  2. பரஸ்பர நன்மை பயக்கும் தலையீடுகளை அடையாளம் காணுதல் தொடர்பில் இலங்கை சிவில் சமூகக் குழுவுடனான கலந்துரையாடலானது 4 முக்கிய சிவில்சமூக அமைப்புக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
  3. மாணவர்களினூடாக அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு கருத்தினை உருவாக்குதல் தொடர்பில் வண்ணத்துப்பூச்சி அமைதிப் பூங்காவுடான கலந்துரையாடல்.
  4. டிசம்பர் 21, 2021 - மட்டக்களப்பு மாவட்டத்தின் மாற்றுத் திறனாளிகளின் நடவடிக்கைக்கான குழுவுடனான கலந்தரையாடல். மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களை அவற்றின் அலுவலர்கள் பிரதிநிதித்துவப்படுத்தினர்.
10. “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவை:
 
நீதியமைச்சினால் வட மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த “நீதிக்கான அணுகல்” நடமாடும் சேவையில் இழப்பீடுகளுக்கான அலுவலகமும் பங்கேற்றது. இந் நடமாடும் சேவையானது 2022, ஜனவரி, 26 தொடக்கம் 30 ஆம் திகதி வரையில் நடைபெற்றது. நடமாடும் சேவையின் போது பின்வரும் செயற்பாடுகள் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டன-
  1. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் ஆணை மற்றும் செயல்பாடுகள் குறித்து அரச அதிகாரிகளுக்கிடையில்  விழிப்புணர்வினை உருவாக்கும் விதத்திலான  அமர்வு.
  2. இன்னலுக்குள்ளான நபர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவது தொடர்பாக ஆவணங்களில் உள்ள குறைபாடுள்ளப் பூர்த்தி செய்தல்
11.  கொள்கை தலையீடுகளை அமுல்ப்படுத்துதல் தொடர்பில் அரசு நிறுவனங்களுடனான கலந்துரையாடல்:
  1. கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல் - 11, பிப்ரவரி, 2022 அன்று பாடசாலை மட்டத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துதல் குறித்துக் கலந்துரையாடப்பட்டது.
12. இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் திட்டமிடல் தினம் - இழப்பீடுகளுக்கான அலவலகத்தின் அனைத்து ஊழியர்களினதும் பங்கேற்புடன் இழப்பீட்டுக் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு இணங்க விரிவான செயல் திட்டத்தை உருவாக்கும்          முகமாகத்  திட்டமிடல்  தினமானது 25, பிப்ரவரி, 2022 அன்று நடாத்தப்பட்டது.