முக்கிய செய்திகள்
Highlighter

இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை நோக்கமாகக் கொண்ட செயல்பாடுகளுடன் பணிக்கப்பட்ட மூன்று அமைப்புகளை உள்ளடக்கிய "தேசிய ஒற்றுமை கொத்தணி" ஒன்றனை நிறுவுவதற்கான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளது. அம்மூன்று நிறுவனங்களாக - இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR), காணாமல் போனோர்களுக்கான அலுவலகம் (OMP) மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் (ONUR) என்பன காணப்படுகின்றன. இம்மூன்று நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஒவ்வொன்றின் திட்டங்களையும் பற்றி கலந்துரையாடவும், அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவை வழங்கவும், ஒரேவிதமான செயல்பாடுகள் மீண்டும் நிகழ்வது தவிர்க்கப்படுவதை உறுதி செய்யவதற்காகவும் தவறாமல் ஒன்று கூடி வருகின்றனர். திட்டங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு நிறுவனத்திற்கும் கிடைக்கும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதே இதன் நோக்கமாகும்.