முக்கிய செய்திகள்
Highlighter

இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பது இலங்கையின் இழப்பீடுகளின் முறையை முகாமை செய்வதற்கும் மற்றும் மோதலால் இன்னலுக்குள்ளானவர்களுக்கு இழப்பீடுகள் வழங்குவதற்கும் 2018ஆம் ஆண்டின் 34ஆம் இலக்க இழப்பீடுகளுக்கான அலுவலகச் சட்டத்தின் நியதிகளுக்கு ஏற்ப தாபிக்கப்பட்ட ஒரு சுயாதீன அமைப்பாகும். சட்டத்தின் முன்னுரையானது சட்டத்தின் அடிப்படையினை விளக்குகிறது, அதாவது –

"இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பு அனைத்து இலங்கையர்களின் உள்ளார்ந்த கண்ணியத்தையும் சமமான மற்றும் மாற்ற முடியாத மனித உரிமைகளையும் அங்கீகரிக்கின்றமையினால் இவ் உரிமைகளை மதித்தல், பாதுகாத்தல் மற்றும் முன்னேற்றுதல் அரசின் கடப்பாடாகும்.

மற்றும் செயற்றிறனான இழப்பீட்டுத் திட்டம் ஒன்றிற்கான அனைத்து இலங்கையர்களின் உரிமைகளிலும் உள்ள ஒரு விரிவான இழப்பீட்டுத் திட்டம் எதிர்கால சந்ததியினர் உட்பட அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பிற்கும் நலன் பேணுதலுக்காவும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு பங்களிப்புச் செய்யும்”

1983ஆம் ஆண்டு முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற ஆயுத மோதல்கள், அதன் விளைவாக இன்னலுக்குள்ளானவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு மற்றும் சேதத்தைத் குறைப்பதற்கான தலையீடுகள் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே இழப்பீடுகளுக்கானதொரு முறையினை நிறுவ வேண்டும் எனக் கருதப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளினால் இன்னலுக்குள்ளானவர்களும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தகுதியுடையவர்களாக மாறுகின்றனர். இது வரை இதுபோன்ற எட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

இழப்பீடுகளை வழங்குவது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும், இது ஒட்டுமொத்த மீறல்களையும் சரிசெய்ய முயற்சிக்கிறது, இருப்பினும் இந்த மீறல்களில் சில சரிசெய்ய முடியாதவை என்பதோடு, இழப்பீடுகளாக வழங்கப்படுகின்றவை எவற்றினாலும் இன்னலுக்குள்ளானவரின் முந்தைய நிலையை மீட்டெடுக்க முடியாது எனவும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மோதல்களால் இன்னலுக்குள்ளான நபர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான இலங்கையின் அணுகுமுறையானது, நிதிசார் நட்டஈடு மாத்திரமல்லாது மோதலால் இன்னலுக்குள்ளான நபர்களுக்கு உதவி வழங்குகின்ற ஏனைய வகையிலான தலையீடுகள் உள்ளடக்கிய இழப்பீடுகளை வழங்குகின்ற அதிகாரத்துடன் கூடிய இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்கின்ற சுயாதீனமாக இயங்கத்தக்க சட்ட அமைப்பை நிறுவுவதாக அமைந்தது. 2018ஆம் ஆண்டின் சட்டத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இழப்பீட்டு முறை, கடந்த கால திட்டங்களை மேம்படுத்துவதுடன் முக்கியமாக, இழப்பீடுகளை வழங்குவதன் இறுதி நோக்கங்களான தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை அடைவதும், வன்முறை மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதுமாகும்.

சட்டத்தால் வலுப்படுத்தப்பட்ட ஒரு விரிவான சட்ட முறையை அறிமுகப்படுத்துவது, மோதல்களின் போது இன்னலுக்குள்ளானவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதில் மிகப்பெரிய முக்கியத்துவத்தை வழங்குவது குறித்த இலங்கையின் அர்ப்பணிப்பினை நிரூபிக்கிறது. பரிகாரங்கள் கிடைக்கக்கூடிய முரண்பாடுகளின் வகைகள், பொதுவான நிகழ்வுகளுக்கும், குறிப்பாக "வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடந்த ஆயுத மோதல்கள் மற்றும் அதன் பின்விளைவுகளுக்கும்" பொருந்தக்கூடிய பொதுவான வகைகளைக் குறிப்பதன் மூலம் தளிவாக வரையறுக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்டுள்ள சட்டத்தின் ஏற்பாடுகள் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தால் வடிவமைக்கப்பட்டு, அமைச்சரவை அமைச்சர்களால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீடுகளுக்கான கொள்கை மற்றும் வழிகாட்டுதல்கள், பெண்கள், சிறுவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட இலகுவில் இன்னலுக்குள்ளாகக் கூடிய நபர்களுக்கு விசேட முக்கியத்துவம் வழங்கி இழப்பீடுளை வழங்குவதற்கு ஏற்புடைய தத்துவங்களை குறிப்பிடுகின்றது. சட்டத்தின் ஏற்பாடுகள் தொடர்பில் கேள்வி மற்றும் பதில் ஆவணத்தில் விளக்கப்பட்டுள்ளது.